எம்வமப் பற்றி
ஆங்கிலமல்லாத மற்ற மொழிகளைப் பேசும் சனங்களுக்கு மன நலத்தைப் பற்றிய தகவல்களை வாசித்து விளங்கிக்கொளவதை எளிதாக்குவதற்காக Victorian Multicultural Commission -இனால் துவக்கப்பட்டுள்ள திட்டமே “HeartChat” என்பதாகும்.
‘மன நலம்’ என்பது நமது உணர்ச்சிகளையும், எண்ணங்களையும், உறவுகளையும் உள்ளடக்குவதாகும். நாம் சிந்திக்கும், உணரும் மற்றும் செயல்படும் விதங்களை இது பாதிக்கவல்லது. மன அழுத்தத்தை நாம் கையாளும் விதத்தையும், மற்றவர்களுடன் நாம் பேசும் விதத்தையும், தெரிவுகளை நாம் மேற்கொள்ளும் விதத்தையும் கூட இது பாதிக்கும். ஒரு இள வயதுக் குழந்தையில் இருந்து, வயதுவந்ததொரு மூத்த நபர் வரைக்குமான அனைத்து வயதினருக்கும் மன நலம் முக்கியம்.