
HeartChat -ஐப் பற்றி


ஆங்கிலமல்லாத மற்ற மொழிகளைப் பேசும் சனங்களுக்கு மன நலத்தைப் பற்றிய தகவல்களை வாசித்து விளங்கிக்கொளவதை எளிதாக்குவதற்காக Victorian Multicultural Commission -இனால் துவக்கப்பட்டுள்ள திட்டமே “HeartChat” என்பதாகும்.
‘மன நலம்’ என்பது நமது உணர்ச்சிகளையும், எண்ணங்களையும், உறவுகளையும் உள்ளடக்குவதாகும். நாம் சிந்திக்கும், உணரும் மற்றும் செயல்படும் விதங்களை இது பாதிக்கவல்லது. மன அழுத்தத்தை நாம் கையாளும் விதத்தையும், மற்றவர்களுடன் நாம் பேசும் விதத்தையும், தெரிவுகளை நாம் மேற்கொள்ளும் விதத்தையும் கூட இது பாதிக்கும். ஒரு இள வயதுக் குழந்தையில் இருந்து, வயதுவந்ததொரு மூத்த நபர் வரைக்குமான அனைத்து வயதினருக்கும் மன நலம் முக்கியம்.
HeartChat என்பது பின் வருவனவற்றிற்கான பாதுகாப்பான மற்றும் வரவேற்கும் தன்மையுள்ளதொரு ஸ்தலமாகும்:

நல்ல மன நலம் மற்றும் கெட்ட மன நலன் என்பதன் அர்த்தம் என்ன - மன நலத்தினைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்

நீங்கள் பேசக்கூடிய - உங்கள் மொழியைப் பேசவல்ல மற்றும்/அல்லது உங்களுடைய கலாச்சாரப் பின்பலத்தைப் பற்றித் தெரிந்த யாராவதொரு தொழில்ரீதி வல்லுனரைக் கண்டறியுங்கள்
Project HeartChat also thanks our volunteers:
Tushar Bist | Arlie Jace Barwell-Chung | Shirley Tang
நீங்கள் ஒரு மன நலத் தொழில் வல்லுனரா?
HEARTCHAT -இல் எம்முைன் இவையுங்கள
தொலைபேசி இலக்கப் புத்தகத்தில் இடம்பெறவும், பல்கலாச்சாரத் தனி நபர்கள் மற்றும் சமூகத்தினருக்கு மன நல ஆதரவுதவியையும் சேவைகளையும் அளிக்கவும் விரும்பும் எவ்வொரு தொழில்ரீதி வல்லுன மன நல ஊழியர்களையும் “HeartChat” திட்டம் வரவேற்கிறது.
எம்முடனான உங்களது வாடிக்கையாளர் தளத்தினை நீங்கள் வலுப்படுத்த உதவும் விதத்தில், HeartChat திட்டமானது 1 சூலை 2021 வரை செயல்முறைக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்கிறது
உங்களுடைய பெறுமதி மிக்க சேவைகளை இன்னும் அதியளவிலான பற்கலாசாரத் தனிநபர்களும், சமூகத்தினரும் அணுகிப் பெறும் வகையில் அவர்களை ஊக்குவிப்பதற்காகவே குறைந்த கட்டணங்களைக் கருத்தில் கொள்ளுமாறு உங்களை வேண்டுகிறோம்.

